Search This Blog

Sunday, April 3, 2011

SRILANKAN TAMILAN'S


ஈழத்தில் சோனியாகாந்தியின் ஆதரவோடு இந்திய அரசாங்கம் வாரி வழங்கிய ஆயுதங்கள் துணையோடு ராஜபக்ச அரசாங்கம் நடத்திய நரவேட்டையில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர்.

 இதனை பொறுக்க முடியாமல் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்தார். அதே போல் செங்கல்பட்டு அகதி முகாமில் தமிழக காவல்துறை செய்த கொடுமைகள் வெளியே கசிந்தபோது சட்டக்கல்லூரி மாணவனான அசோக்குமார் பல போராட்டங்களை முன்னின்று மேற்கொண்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டே அந்த இளைஞனை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடித்து உதைத்தனர்.  காவல்துறையின் சித்திரவதையால் அந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றான். இதற்கெல்லாம் காரணமான கருணாநிதியை வரலாறு மன்னிக்காது. அதனை தமிழினம் என்றும் மறக்காது.  ராணுவத்தையே எதிர்த்து நின்றவர்கள் தமிழர்கள்.  அப்படிப்பட்டவர்கள் தோற்றுப்போகமாட்டார்கள் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.


ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் ‐ மல்லை சத்தியா:‐

ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப்போராடும் மக்களுக்கும், போராளிகளின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் இங்குள்ள சுப்பிரமணிய சாமி எங்கள் தலைவர் வைகோவை நாடுகடத்தவேண்டும் என கூறியுள்ளார்.

ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என சத்திய குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றி அவர்,எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல்,  உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார். ஐநா சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு.  இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அரிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான்.  விரைவில் அங்கேயும் உரையாற்றுவார் எனவும் மல்லை சத்திய கூறியுள்ளார்.

அதேவேளை இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானம்: காவிரி ஆறு,முல்லைப்பெரியாறு,பாலாறு போன்றவற்றிற்கு தமிழகத்திற்கான பங்கைப்பெறுவதில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தில் தவறிவிட்டது.இதனை மதிமுக வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்திற்காக உரிமைக்காக மதிமுக தொடர்ந்து போராடும்.

இரண்டாவது தீர்மானம்: இந்தியா என்பது பல நாடுகள் இணைந்ததே இந்தியாவாகும்.  இந்நாடுகளூக்கு சுயாட்சியுடன் இருக்க மதிமுக போராட்டங்களை நடத்தும்.  முதற்கட்டமாக  இந்தியா என்ற பெயருக்கு பதிலாக இந்திய ஐக்கிய நாடுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

மூன்றாவது தீர்மானம்: இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவு வழங்கிய இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.  அதோடு அம்மக்களுக்கும்  தனித்தமிழ் ஈழமே இறுதித்தீர்வு.  தனித்தமிழ் ஈழம்தான் அம்மக்களை சுதந்திரமான,நிம்மதியான வாழ்வுக்கு அழைத்துச்செல்லும்.அதனால் தனித்தமிழ் ஈழத்திற்காக அம்மக்களோடு இணைந்து மதிமுக தொடர்ந்து போராடும்.  தனித்தமிழ் ஈழமே மதிமுகவின் கொள்கை.

இந்த  மூன்று தீர்மானங்களை மதிமுகவின் கட்சி முக்கியஸ்தர்கள் முன்மொழிந்தனர்.   தொண்டர்கள் கைத்தட்டலும் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேவேளை மாநாட்டில் கலந்துக்கொண்ட தொண்டர்களில் அதிகளவானோர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்ட டி.சர்ட் அணிந்திருந்தனர்.ஈழம் பற்றிய புத்தகங்ககள் மற்றும் ஈழம் பற்றிய குறும்படங்கள் இம்மநாட்டிற்கு வந்த தொண்டர்கள் வாங்கிச்செல்கின்றனர்.

No comments:

Post a Comment