Search This Blog

Friday, July 1, 2011

நட்பு

"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!
எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!
எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!
தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!
என்றும்,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!
எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
காமமா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!
இதை கடைசிவரை நான்
காப்பாற்றுவேன் என்று கூறி,
உனது நட்பை வாழ்த்தி
வணங்குகிறேன்

''ஜில்லென்று'' ஒரு மின்சாரம்!

பாட்டரிகளில் ஓரளவுக்கே மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும் என்ற நிலையில், அதிகப்படியாக உற்பத்தியாகும் மின்சாரத்தை வேறு ஒரு வகையில் உருமாற்றி, சேமித்து வைத்து, தேவைப்படும்போது பின்னர் அதையே மீண்டும் மின்சாரமாக மாற்றுவது குறித்து ஒரு ஆராய்ச்சி நடந்து வருகிறது இங்கிலாந்தில்.

இது நம் நாட்டுக்கு பொறுந்தாத ஆராய்ச்சி என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும். இங்கு உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியே நம் அரசியல்வாதிகள், குறிப்பாக மி்ன்துறை அமைச்சர்கள், சொல்லும் பொய்களை விடப் பெரியது.

ஆனால், பல நாடுகளில் மின்சாரம் அதிகப்படியாகவே உற்பத்தியாகிறது. இதை அப்படியே சேமிப்பது சாத்தியமில்லை என்பதால் அது வீணாகி வருகிறது.

இதை எப்படியெல்லாம் வேறு வகையில் உருமாற்றி சேமித்து வைத்து மீண்டும் மின்சாரம் ஆக்கலாம் என்று உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகும் சீன அறிவியல் மையமும் இணைந்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளன.

இதற்கு இவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கிரையோஜெனிக் டெக்னாலஜி. நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை 'சப்-ஸீரோ' வெப்பநிலைக்கு குளிரூட்டி திரவமாக்கி, அதை அதிக சக்தி கொண்ட எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துவதே கிரையோஜெனிக் தொழில்நுட்பம்.

இப்போதைய நவீன ராக்கெட்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.

இதையே கொண்டு மின்சாரத்தை சேமிக்கலாம் என்கிறார்கள் இங்கிலாந்து-சீன விஞ்ஞானிகள்.

அவர்கள் சொல்வது இது தான்: அதிகப்படியாக உள்ள மின்சாரத்தைக் கொண்டு நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களை குளிரூட்டி திரவமாக்கி சேமித்து வைக்கலாம்.

இந்த சேமிப்பு அதிகமாகும்போது, மின்சார உற்பத்தியை குறைத்துவிட்டோ அல்லது நிறுத்திவிட்டோ, இந்த திரவ நைட்ரஜன் அல்லது ஆக்ஸிஜனையே எரித்து மீண்டும் வாயுவாக்கி, அதைக் கொண்டே மின் உற்பத்தி டர்பனைகளை இயக்கி மின்சாரத்தை தயாரிக்கலாம் என்கிறார்கள்.

இதை எரித்து வாயுவாக்க அதிக செலவும் ஆகாது காரணம். குளிரூட்டுவதை நிறுத்திவிட்டாலே இந்த திரவ நிலை ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் மீண்டும் வாயுக்களாக ஆரம்பித்துவிடும் என்பது தான்.

அதே போல இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களில் அந்த வாயுவோடு இந்த திரவ நிலை நைட்ரஜன், ஆக்ஸிஜனையும் கலந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். இதனால் இயற்கை எரிவாயுவையும் மிச்சப்படுத்த முடியும்.

மேலும் இவ்வாறு கலக்கும்போது மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நைட்ரஜன் ஆக்ஸைட், கார்பன் டை ஆக்ஸைட் ஆகியவற்றின் அளவும் குறையும் என்கிறார்கள்.

இது ஒரு ஆராச்சியா.. இதெல்லாம் நடக்குற விஷயமா என்று விமர்சனங்கள், கிண்டல்கள் கிளம்பியிருந்தாலும் ''வாழ்க வசவாளர்கள்'' என்று சொல்லிவிட்டு தங்கள் ஆய்வை தொடர்ந்து கொண்டுள்ளது லீட்ஸ் பல்கலைக்கழகக் குழு.